நாடு அநுரவோடு என்ற இலட்சிய வார்த்தைகளையும் மற்றும் திசைக்காட்டிக்குரிய சின்னங்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டாலும் வார்த்தையால் அரசியல் மாற்றம் செய்வதற்கும் நடைமுறையில் மாற்றம் கொண்டு வருவதற்குமான வித்தியாசம் சமகாலத்தில் வெளியில் புலப்படுகின்றது.
முன்னைய ஆட்சி தரப்பின் தவறுகளை சுட்டிக்காட்டி புதிதாக தோன்றிய அறுகம்பை தாக்குதல் நடத்தப்படவிருந்தமை தகர்க்கப்பட்டதாக ஒரு விம்பத்தை உருவாக்கி நாடாளுமன்ற தேர்தலுக்கு வாக்குகளை சேர்க்க அநுர (Anura Kumara Dissanayake) முயல்கின்றாரா ?
நாடாளுமன்ற தேர்தலை முன்னிலைப்படுத்தி மாத்திரமே தற்போது அரசியல் நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் பொருளாதாரம் குறித்தும் அநுரவின் மாற்றத்தை மக்கள் எதிர்பார்த்த வண்ணமுள்ளனர்.
இதுவரைக்காலம் காணப்பட்ட பொருளாதார சிக்கல் நிமித்தம் அவ்வாறான சூழல் திரும்ப ஏற்படக்கூடாது என்பதன் அடிப்படையில்தான் மக்கள் இம்முறை அநுரவை தேர்தெடுத்தனர்.
இருப்பினும், பொருட்களின் விலை அதிகரிப்பின் தற்போதைய தாக்கம் மக்களுக்கு அநுர மீதான நம்பிக்கையை எவ்வளவு தூரம் கொண்டு செல்லும் என்பது கேள்விக்குறிதான் !
https://www.youtube.com/embed/fU908YYlc6Q