பிரித்தானிய அரசாங்கத்தால் நிதி அளிக்கப்பட்ட புகலிட விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கையர் ஒருவர் மீது பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
அதன்படி, மேற்கு லண்டனில் 15 வயது சிறுமியைக் கடத்தி, பாலியல் துஷ்பிரயோகம் செய்து, தாக்கியதாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
எனினும் குறித்த குற்றச்சாட்டுக்களை இலங்கையர் மறுத்துள்ளார்.
வீடியோ மூலம் முன்னிலை
20 வயதான யான் ஹிமாசார என்ற அவர் ஐல்வொர்த் கிரவுன் நீதிமன்றத்தில் வீடியோ இணைப்பு மூலம் முன்னிலை செய்யப்பட்டார்.

இதன்போது சிங்கள மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் பேசிய அவர், தம் மீது சுமத்தப்பட்டுள்ள 15 வயது சிறுமியை கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் புரிந்தமை உட்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
இந்த சம்பவம் 2025 நவம்பர் 1 ஆம் திகதியன்று மேற்கு லண்டனில் உள்ள ஃபெல்தாமில் நடந்ததாக சட்டத்தரணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த நிலையில் வழக்கை எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் திகதி வரை நீதிபதி ஒத்தி வைத்தார்.

