வழங்கிய வாக்குறுதிகளை மறந்து கடந்த கால அரசியலின் ஊழல் குற்றச்சாட்டுக்களை மாத்திரம் வைத்து தற்போதைய அரசு செயற்படுவதாக பிரித்தானிய அரசியல் ஆய்வாளர் அருஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தென்னிலங்கையில் இருந்து வெளியாகும் தகவல்களில் கூட தற்போதைய அரசு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திண்டாடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதற்கெடுத்தாலும் தற்போதைய அரசு ஊழல் குற்றச்சாட்டுக்களை மற்றுமே கையிலெடுகின்றனர்.
ஆனால், மக்களை பொறுத்த வரையில் இது கடந்து போக கூடிய ஒரு விடயமாக மாத்திரமே காணப்படுகின்றது, ஆனால் மக்கள் கேள்விக்கேட்க ஆரம்பித்தால் இவர்களுக்கு தப்பி பிழைக்க வழியில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதைய அரசின் நிலை, எதிர்கால அரசியல், நாட்டின் இராணுவ பாதுகாப்பு, பொருளாதார மேம்பாடு மற்றும் சர்வதேச நாமுகளுடனான இலங்கை அரசியன் தொடர்பு என்பவை தொடர்பில் அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,
https://www.youtube.com/embed/w0AstgK47AA?start=592