முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஐ.நா ஆணையாளரின் இலங்கை விஜயத்துக்கான காரணம்: அம்பலப்படுத்திய சாணக்கியன் எம்.பி

மத்திய கிழக்கு உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் நிலவும் பிரச்சினைகளால் எதிர்வரும்
ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைத் தமிழர் பிரச்சினை நீர்த்துப் போகாமல்
இருப்பதற்காகவே தான் நேரடியாக இங்கு வந்ததாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்
பேரவையின் ஆணையாளர் தன்னிடம் தெரிவித்ததாக இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் (R.Shanakiyan) தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk) நேற்று (25) இரவு யாழ்ப்பாண நகரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற சந்திப்பில் நாடாளுமன்ற
உறுப்பினர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சாணக்கியன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சந்திப்பு தொடர்பாக மேலும் குறிப்பிட்ட சாணக்கியன், “ ஈரான் – இஸ்ரேல், பாகிஸ்தான் – இந்தியா, ரஷ்யா – உக்ரைன், இஸ்ரேல் – பலஸ்தீனம்
என சர்வதேச ரீதியில் நாடுகளிடையே பிரச்சினைகள் நிலவும் போது இலங்கை விவகாரம்
எதிர்வரும் ஜெனிவா கூட்டத்தில் காத்திரமாக பேசப்படுமா என நான் ஐக்கிய நாடுகள்
மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரிடம் கேட்ட போது, இலங்கை விவகாரம் நீர்த்துப்
போகாமல் இருப்பதற்காகவே தான் நேரடியாக இங்கு வந்ததாக தெரிவித்தார் .

அரசியல் கைதிகளின் விடுதலை

மேலும் மனித புதைகுழிகள் விவகாரம், அரசியல் கைதிகளின் விடுதலை, காணி
விடுவிப்பு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்கள்
தொடர்பாக குறித்த சந்திப்பில் பேசப்பட்டது என தெரிவித்தார்.

ஐ.நா ஆணையாளரின் இலங்கை விஜயத்துக்கான காரணம்: அம்பலப்படுத்திய சாணக்கியன் எம்.பி | Sri Lankan Tamil Issue At Geneva Conference

இது தொடர்பில் கருத்து தெரிவித்த தர்மலிங்கம் சித்தார்த்தன், ”மிக மோசமாக அரசாங்கம் நடக்காமல் இருப்பதற்கு ஜெனீவா தீர்மானங்களை தொடர்ந்து
முன் கொண்டு செல்ல வேண்டும் என்பதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்
ஆணையாளருக்கு வலியுறுத்தியதாக குறிப்பிட்டார்.

அத்துடன், காணிப் பிரச்சினை காணாமல் ஆக்கப்பட்டோர்
பிரச்சினை சிறைகளில் வாடுகின்றவர்களின் பிரச்சினைகளை நாம் சொல்லும் போது அவர்
தமக்கு தெரியும் என்று சொன்னார் என தெரிவித்தார்.

செம்மணி மனிதப் புதைகுழி

இந்த சந்திப்பு குறித்து சிறீதரன் தெரிவிக்கையில், ”செம்மணி, குருந்தூர் மலை வெடுக்குநாறி மலை, வலிகாமம் வடக்கு காணி விடுவிப்பு
உள்ளிட்ட பல விடயங்களை சுட்டிக்காட்டினேன்.

ஐ.நா ஆணையாளரின் இலங்கை விஜயத்துக்கான காரணம்: அம்பலப்படுத்திய சாணக்கியன் எம்.பி | Sri Lankan Tamil Issue At Geneva Conference

இலங்கையிலே பொறுப்பு கூறல் என்பது நேர்மையான கண்ணியமான
முறையில் முன்வைக்கப்படவில்லை. பொறுப்புக் கூறலை பரிகார நீதியுடன் கூடியதாக
வலியுறுத்த வேண்டியதன் அவசியத்தை நாம் தெளிவுடன் எடுத்து கூறியுள்ளோம்” என தெரிவித்தார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.