முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மாவை இறந்து விட்டதாக தூக்கி வீசி சென்ற இராணுவம்! பின்னர் நடந்த அபூர்வம் – காலம் கடந்து வெளியாகும் தகவல்

மாவை சேனாதிராஜாவின் எண்ணத்தில் எந்த நேரமும் இனம் பற்றிய சிந்தனை இருந்துள்ள, யாரையுமே நோகடிக்காத ஒரு நல்ல மனம் இருந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

அவர் இல்லாத இந்த ஆறு மாதங்களில் அவரது பலம் என்ன அவரது பலவீனம் என்ன என இன்று பலர் அறிவதற்கு தலைப்பட்டு இருக்கிறார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சங்கானை கலாசார மண்டபத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற மாவை சேனாதிராஜாவின் ஆறாவது மாத நினைவு பகிர்வு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகள் ஏற்படுத்தியிருந்த ஒற்றுமை

அவர் மேலும் தெரிவிக்கையில், 2001ஆம் ஆண்டிலிருந்து 2009ஆம் ஆண்டு வரை தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்படுத்தியிருந்த ஒற்றுமையை, 2010இல் இருந்து அதற்கு பின்னர் ஓரளவுக்கு பேணியதில் மாவை சேனாதிராஜாவுக்கு பெரும் பங்கு உண்டு. என்னை அரசியலுக்குள் கொண்டு வந்ததும் அண்ணன் மாவை சேனாதிராஜாவே.

மாவை இறந்து விட்டதாக தூக்கி வீசி சென்ற இராணுவம்! பின்னர் நடந்த அபூர்வம் - காலம் கடந்து வெளியாகும் தகவல் | Sridharan Mp Statement About Mavai Senathiraja

அந்த நேரம் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த இராசநாயகத்தை அரசியலுக்குள் கொண்டு வர முயற்சித்தோம். சில காரணங்களுக்காக அவர் விலகியதால் வைத்தியர் சத்தியமூர்த்தி, அரியரட்ணம், தர்மரட்ணம் இப்படி சிலரை அரசியலுக்குள் கொண்டுவர முயற்சித்தும் அது பலனளிக்காமல் போகவே நான் அரசியலுக்குள் வரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

மாகாணசபை தேர்தல் காலத்தில் நாங்கள் அவரிடம் பேசுகின்ற போது அவர் எம்மிடம், இனம் முக்கியம், இனத்துக்காக பாடுபட வேண்டும், அதற்காக நாங்கள் எந்த விட்டுக்கொடுப்பும் செய்ய வேண்டும் என்றார். அவரது இழப்பென்பது தமிழ் மக்களை பொருத்தவரை ஒரு பாரிய இழப்பு.

தமிழ் தேசிய இனத்திற்கு கிடைத்த ஒரு ஒப்பற்ற தலைவர். தமிழரசு கட்சியின் செயற்பாடுகளை எல்லா மாவட்டங்களுக்கும் கொண்டு சென்றவர் அண்ணன் மாவை சேனாதிராஜா. நிறைய பேரால் பேசப்பட்டவராகவும் அல்லது விமர்சிக்கப்பட்டவராகவும் அவர் இருந்தார்.

மிகப்பெரிய சரித்திரம்

அனைத்தையும் பொறுத்து இனத்துக்காக வாழ்ந்த மிகப்பெரிய ஒரு மனிதர். ஒருமுறை அவர் இறந்து விட்டார் என ஆனையிறவு பகுதியில் இராணுவத்தினர் அவரை தூக்கி வீசி விட்டு சென்றார்கள். அதற்குப் பின்னரும் அவர் உயிருடன் வந்தது என்பது அபூர்வம்.

மாவை இறந்து விட்டதாக தூக்கி வீசி சென்ற இராணுவம்! பின்னர் நடந்த அபூர்வம் - காலம் கடந்து வெளியாகும் தகவல் | Sridharan Mp Statement About Mavai Senathiraja

அதேபோல அவர் 2001ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக ஊர்காவற்துறை – தம்பாட்டிக்கு சென்றபோது அங்கு வைத்து ஈ.பி.டி.பியினரால் அவரது மண்டை பிளக்கப்பட்டது. அதற்குப் பின்னர் தான் அவரது உடலில் ஒரு சமநிலை மாற்றம் ஏற்பட்டது. அவரது வாழ்க்கை என்பது ஒரு மிகப்பெரிய சரித்திரம்.

எமது இனத்தைப் பொறுத்தவரை இனிமேல் இவ்வாறான ஒரு தலைவரை நாங்கள் பெற முடியாது. இப்படியான ஒரு நல்ல மனிதருக்கு நிறைய மன வருத்தங்களை கொடுத்தவர்கள் பலர். மனோரீதியாக அவரை பாதிப்படையை செய்தவர்கள் பலர்.

ஆனால் வரலாறு அவர்களுக்கு அந்த தண்டனையை திருப்பி வழங்கிக் கொண்டுதான் இருக்கின்றது.

இயற்கையும் வரலாறும் தண்டனையை வழங்கும். அதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. நாங்கள் செய்வது உமக்கு என்பது ஒரு உலக நியதியும் விதியம் கூட. நல்லது செய்தால் நல்லது கிடைக்கும், கெட்டது செய்தால் கெட்டது கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.