முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வடக்கில் வாக்குறுதிகளை அள்ளி கொட்டிய நாமல் ராஜபக்ச

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமென சிறிலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை யாழ்ப்பாண (Jaffna) ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தாம் எப்போதும் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட உறுதிமொழி

மைத்திரிபால சிறிசேன தொடக்கம் விக்ரமசிங்க அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் தாம் சிறையில் அடைக்கப்பட்ட போது தமிழ் அரசியல் கைதிகளுடன் தாம் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் விவகாரத்தில் கோதுமை ராஜபக்சவுடனும் தான் தனிப்பட்ட ரீதியில் முயற்சித்ததாக தெரிவிக்கின்றார்
இந்த உறுதிமொழி அரசியல் ரீதியானது அல்ல எனவும் இது அவர்களுக்கு தாம் வழங்கிய தனிப்பட்ட உறுதிமொழி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஏனைய வேட்பாளர்களுக்கு இரண்டு ஆண்டு காலப்பகுதி பிரசாரம் செய்வதற்கு அவகாசம் கிடைத்தது.

எனினும் எனக்கு ஐந்து வாரங்களில் இந்த பிரசார நடவடிக்கையை மேற்கொள்ள நேரிட்டுள்ளது எனவே நான் இந்த பிரசார நடவடிக்கைகளை செய்வதற்காக அனைத்து தேர்தல் தொகுதிகளுக்கும் செல்ல வேண்டி உள்ளது.

வடக்கில் வாக்குறுதிகளை அள்ளி கொட்டிய நாமல் ராஜபக்ச | Srilanka 2024 President Election Updates

அதனால் நான் வடக்கிற்கு ஒப்பீட்டு அளவில் கூடுதலாக வரவில்லை எனினும் தேர்தல் பிரசாரம் அன்றி வேறு சந்தர்ப்பங்களில் நான் வடக்கிற்கு வந்திருக்கின்றேன் வடக்கில், யாழ்ப்பாணத்தில் என்னுடைய உறவினர்கள் இருக்கின்றார்கள் மற்றும் நண்பர்கள் இருக்கின்றார்கள்.

தனிப்பட்ட ரீதியில் நான் வந்து செல்வேன் எனினும் இந்த வரையறுக்கப்பட்ட காலப்பகுதியில் என்னால் அதிக அளவில் வடக்கில் நேரத்தை செலவிட முடியவில்லை ஏனைய வேட்பாளர்கள் இங்கு அதிகம் உலவுவதனால் நான் இங்கு அதிகம் வரவில்லை.

காணி காவல்துறை அதிகாரங்கள் வழங்குவது தொடர்பில் என்னால் பொய்யுரைக்க முடியாது அத்தோடு வட மாகாணத்திற்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை வழங்குவதாக இதற்கு முன்னர் பதவி வகித்த எட்டு ஜனாதிபதிகள் உறுதிமொழி வழங்கிய போதிலும் எவரும் அதனை வழங்கவில்லை.

மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) ஜனாதிபதி 13 பிளஸ் என ஆனால் அவர் அதனை வழங்கவில்லை அதேபோல் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) ஜனாதிபதியும் 13 பிளஸ் எனக் கூறினார் அவரும் அதனை வழங்கவில்லை.

நல்லாட்சி அரசாங்கம் 

நல்லாட்சி அரசாங்கமும் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை வழங்குவதாக கூறிய போதிலும் அவ்வாறு செய்யவில்லை.

எங்களது கட்சியின் தீர்மானம் காணி காவல்துறை அதிகாரங்களை வழங்குவதில்லை என்பதாகும் எனக்கு இந்த சந்தர்ப்பத்தில் பொய்யாக எதனையும் கூற முடியாது எவ்வாறு எனினும் வட மாகாணத்தில் இரண்டு தடவைகளே தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.

யுத்தத்திற்கு முன்னர் ஒரு தடவையும் யுத்தத்தின் பின்னர் ஒரு தடவையும் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது எனது தந்தையான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஒரு தடவை தேர்தலை நடத்தினார்.

அதேபோன்று நான் ஆட்சிக்கு வந்தால் வரமாகாணத்தில் தேர்தலை நடத்துவேன் என எனக்கு உறுதியளிக்க முடியும்.

வடக்கில் வாக்குறுதிகளை அள்ளி கொட்டிய நாமல் ராஜபக்ச | Srilanka 2024 President Election Updates

இந்த 13 ஆம் திருத்தச் சட்டத்தை முன்னிலைப்படுத்துவதாக உறுதி அளித்த எவரும் தேர்தலை நடத்தவில்லை எனவே பொய்யாக வாக்குறுதிகளை வழங்க நான் விரும்பவில்லை.

13 ஆம் திருத்தச் சட்டம் தொடர்பில் நாட்டு மக்களுடன் கலந்தாலோசித்து அது குறித்து நன்றாக ஆராய்ந்து தீர்மானம் எடுக்க வேண்டும்.

மாறாக தேர்தல் காலத்தில் காணி காவல்துறை அதிகாரங்களை வழங்குவதாக பொய் வாக்குறுதிகளை அளிப்பதில் எவ்வித பயனும் இல்லை.

தேர்தலின் பின்னர் இது குறித்து அவதானம் செலுத்த முடியும் அத்தோடு நான் நிச்சயமாக தமிழ் மொழியையும் தமிழ் கலாச்சாரத்தையும் பாதுகாப்பேன்.

மக்களுக்கு அரசு சேவை 

தெற்கில் பிள்ளைகளுக்கு கிடைக்கக்கூடிய அனைத்து நலன்களையும் நான் வடக்கு கிழக்கு பிள்ளைகளுக்கும் கிடைக்கச் செய்வேன்.

வடக்கு கிழக்கு மக்களுக்கு அரசு சேவை உள்ளிட்ட சேவைகளை ஏனைய மாகாணங்களைப் போன்று யாழ்ப்பாணத்தில் அபிவிருத்தி ஏற்படுத்த வேண்டும் என கருதுகின்றேன்.

மக்கள் நல்ல ஆக்கத்திறன் படைத்தவர்கள் யாழ்ப்பாணத்தை ஆக்கத்திறன் மையமாக உருவாக்க வேண்டும் அதிகளவான மக்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும்.

இலங்கையில் விமான போக்குவரத்தை அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளேன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில் வடக்கில் ஏற்படுத்தப்பட்ட சுதந்திரம் காரணமாக இன்று அனைத்து வேட்பாளர்களும் இங்கு வந்து பிரசாரம் செய்வதற்கு முடிகின்றது.

வடக்கில் வாக்குறுதிகளை அள்ளி கொட்டிய நாமல் ராஜபக்ச | Srilanka 2024 President Election Updates

பொருளாதார குற்ற செயல்களில் ஈடுபட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படை அற்றவை இந்த சுதந்திரத்தை பாதுகாப்பதற்கு நாம் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படுவோம்.

பொதுஜன முன்னணி ஆட்சியில் இந்த நாடு அபிவிருத்தி அடைந்தது எனவும் நல்லாட்சி அரசாங்க ஆட்சியில் நாடு அபிவிருத்தி அடையவில்லை.

ஊழல் மோசடிகளை இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் அத்தோடு ஊழல் மோசடிகளை தடுப்பதற்கு டிஜிட்டல் முறை முறையிலான தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் அறிவு தம்மிடம் உள்ளது.

மகிந்த ராஜபக்ச பின்பற்றிய உரக் கொள்கையை பின்பற்ற திட்டமிட்டுள்ளதுடன் தற்பொழுது நாட்டில் காணப்படும் வரி முறைமை சிக்கல் மிகுந்தது எனவே இந்த எளிமையான வரிமுறை ஒன்றை அறிமுகம் செய்ய வேண்டும்.

13 ஆம் திருத்தச் சட்டம்

பழைய கோஷங்களுக்கு தொடர்ந்து வாக்கு அளிப்பதா அல்லது எதிர்காலத்தை நினைத்து பிள்ளைகளை நினைத்து வாக்களிப்பதா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.

13 ஆம் திருத்தச் சட்டம் பற்றி பேசுவோர், மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்பதில் கரிசனை காட்டவில்லை முதலாவதாக தமிழ் மக்கள் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும்.

அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் நீண்ட காலமாக அரசியல் பிரச்சினையை கூறி தமிழ் மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை வழங்கி பிள்ளைகளுக்கு சாப்பிட இல்லை என்றால் அதில் பயனில்லை தொழில் வாய்ப்பு இல்லை என்றால் அதில் பயன் இல்லை 13ஆம் திருத்தச் சட்டமும் இனவாதமும் இரண்டு விடயங்கள்.

வடக்கில் வாக்குறுதிகளை அள்ளி கொட்டிய நாமல் ராஜபக்ச | Srilanka 2024 President Election Updates

13ஆம் திருத்தச் சட்டத்தை வழங்காதவர் இனவாதி என்று கூற முடியாது அரசியல் பிரச்சனைக்கு தீர்வு காணும் போது ஒட்டுமொத்த நாட்டையும் கவனத்தில் கொண்டு தீர்வு வழங்கப்பட வேண்டும்.

வெறுமனே வடக்கு கிழக்கு மட்டும் அடிப்படையாகக் கொண்டு அந்த தீர்வு திட்டம் அமையக்கூடாது எனவே அந்த விடயத்தில் நாடாளுமன்றம் தீர்மானங்களை எடுக்கும் 83 ஆம் ஆண்டு வன்முறைகளை ஏற்படுத்தியவர்கள் யார் என்பதை நாம் அறிவோம் அவர்கள் இன்று 13 ஆம் திருத்தச் சட்டம் பற்றி பேசுகிறார்கள் அல்லவா.

ஊடகவியலளார் லசந்த விக்ரமத்துங்க (Lasantha Wickramathunga) மற்றும் ரகர் வீரர் வசீம் தாஜுதீன் (Wasim Tajuddin) படுகொலை சம்பவம் தொடர்பில் தேர்தல் காலத்தில் மட்டும் பேசப்படுகின்றது.

நல்லாட்சி அரசாங்க ஆட்சி காலத்தில் இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டது நீதிமன்ற விசாரணைகளில் அரசியல்வாதிகள் தலையீடு செய்வது பொருத்தம் அல்ல நீதிமன்றம் அது தொடர்பான தீர்மானங்களை எடுக்கும்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாததொழிக்க வேண்டுமானால் நாடாளுமன்ற தேர்தல் முறையும் மாற்றி அமைக்க வேண்டும் அத்தோடு பகுதி பகுதியாக மாற்றங்களைச் செய்வது பொருத்தமற்றதுஅதனை தாம் ஏற்றுக் கொள்ளவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.