டீசல் விலையானது தொழில்துறைகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், பொருளாதார வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு காரணம் என்பதால் குறைந்தபட்சம் டீசல் விலையையாவது குறைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்க மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றுகையிலே ரணவக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
பாரிய இலாபம்
மேலும் கூறுகையில், எரிபொருளின் மூலம் அரசாங்கம் பாரிய இலாபத்தை ஈட்டி வருகின்றது.
மின்சாரம் மற்றும் பெற்றோலியம் ஆகிய துறைகள் இலாபம் ஈட்டக்கூடியவையாக இருப்பதால் அதற்கான நன்மைகளை நிறுவனங்களுக்கு வழங்குவதே பொருத்தமானது.
இதேவேளை, கைத்தொழில் துறையில் மின்சார பாவனை தொடர்பில் அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானமொன்றை எடுக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அதிக மின்சார கட்டணம் தடைகளை ஏற்படுத்துவதாகவும் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு தொழில்கள் பேணப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
அதிக வட்டி வருமானத்திற்கு அறவிடப்படும் வரி! கேவலமான செயலென கொதித்தெழும் பொருளாதார நிபுணர்
கொழும்பில் உள்ள 50,000 அடுக்குமாடி குடியிருப்புகள் குறித்து வெளியான தகவல்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |