ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடும் போது இலங்கை பொதுத் தேர்தல் களம் பரப்பரப்பில்லாமல் இருப்பதை அவதானிக்ககூடியதாக உள்ளது.
சாதகங்களை விட சில எதிர்ப்பார்க்காத புதிய சவால்கள் அரசாங்கத்திற்கு வந்துள்ளன.
தெற்கில் ஏற்பட்ட சிஸ்டம் சேஞ்ச் முறைமை வடக்கில் ஏற்படவில்லை.
தற்போதைய தேர்தல் நிலைமையை பொறுத்தவரையில், தேசிய மக்கள் சக்திக்கு(NPP) வெற்றி கிடைப்பது நிச்சயம்.
ஆனால் இந்த வெற்றி பெரும் சிவப்பு அலையாக 2/3 பெரும்பான்மைக்கும் அதிகமான நாடாளுமன்ற ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி பெறுமா என்ற ஐயம் உள்ளது.
இதேவேளை, தமிழ் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கைகளில் என்ன இருக்கின்றது என்பதை தெரிந்துக்கொள்ள சாமானியர்களுக்கு ஆர்வம் இல்லாத நிலைப்பாடு காணப்படுகின்றது.
தமிழரசுக்கட்சியை பொறுத்தவரையில், யாழ் மாவட்டத்தில் 3 ஆசனங்களையாவது பெற வேண்டும் என்ற நம்பிக்கை உள்ளது.
இது தொடர்பான மேலதிக விடயங்களை ஆராய்கின்றது இன்றைய செய்தி வீச்சு…
https://www.youtube.com/embed/Ez1CoDQqEOI