கடந்த காலங்களில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக செயற்பட்ட ஜே.வி.பியினரால் ஒருபோதும் தமிழ் மக்கள் எந்தவித தீர்வினையும் பெற்றுக்கொள்ள முடியாது என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தினால் வழமைப்போன்று தமிழ் மக்கள் மீண்டும் ஏமாற்றப்படுவர் என்ற எச்சரிக்கை உணர்வுடனேயே பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதாவது, அநுர குமார திசாநாயக்க கடந்த காலங்களில் ஈழத்தமிழர்களுக்கான பல வாய்ப்புகளை எதிர்ப்பதற்கும், முறிப்பதற்கும்,தடுப்பதற்கும் தீவிரமாக செயற்பட்டவர். யுத்த காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்ட ஜே.வி.பியினர் இன்று வரையில் மாறாமல் அவ்வாறே தமிழர்களுக்கு எதிராக செயற்பட்டு வருகின்றனர்.
இலங்கை வரலாற்றில் அநுரவின் வெற்றி என்பது சிங்கள மக்களின் அதிருப்தியால் கிடைத்த வெற்றியே ஆகும். இதனை அமெரிக்கா புரிந்துக்கொள்ளும் பட்சத்தில் அநுரவின் ஆட்சி சில காலம் மாத்திரமே காணப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனை புரிந்துக்கொள்ளாத சிலர் அநுரவினை கொண்டாடி வரும் நிலையில், அவரின் வெற்றிக்காக போராடிய பலர் அவரை விட்டு வெளியேறும் நிலை ஏற்படலாம் என்றும் கூறப்படுகின்றது.
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இலங்கையில் முனனெடுக்கப்படும் அரசியல் நகர்வுகள், திருப்பு முனைகள் மற்றும் உண்மைகள் தொடர்பில் கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் குயின்ரஸ் வெளியிட்ட பல தகவல்களுடன் அலசி ஆராய்கிறது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,