இலங்கையின் ஒட்டுமொத்த கடன் சுமை 28 ட்ரில்லியன் ரூபாயிலிருந்து 35 ட்ரில்லியன் ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 28 ட்ரில்லியன் ரூபாயிலிருந்து 7 ட்ரில்லியன் ரூபாயினால் அதிகரித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் கேள்வி
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 76 வருட காலப்பகுதியில் நாட்டின் ஒட்டுமொத்த கடன் சுமையே 28 ட்ரில்லியன் ரூபாயாகத்தான் காணப்பட்டது. ஆனால், தற்போதைய குறுகிய காலப்பகுதிக்குள் அது மேலும் 7 ட்ரில்லியன் ரூபாயினால் அதிகரித்துள்ளது.

இது குறித்து நான் நாடாளுமன்றத்திலும் கேள்வி எழுப்பியிருந்தேன்.
கடன் வாங்கி அரசாங்கம் நடத்தத் தேவையில்லை என்று கூறியவர்கள், இன்று எங்களை விடவும் அதிகமாகக் கடன் பெற்று வருகின்றனர்.
அரசாங்கத் தரப்பினர் அன்று 1 ட்ரில்லியன் என்று குறிப்பிட்டு வந்த தொகையானது தற்போது 500 மில்லியனாகக் குறைவடைந்துள்ளது.
நாட்டின் உண்மையான பொருளாதார நிலைமை என்ன என்பதை மக்கள் எதிர்காலத்தில் புரிந்து கொள்வார்கள். என்ன நடக்கப் போகிறது என்பதை நாட்டின் மக்களே உணர்ந்து கொள்ளும் காலம் தூரத்தில் இல்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Source: https://ibctamil.com/article/srilanka-s-debt-burden-increased-to-35-trillion-rs-1781597418

