முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலை மாற்றமடையும் – சிறிநாத் உறுதி

மட்டக்களப்பு மாவட்டம் கடந்த
காலத்திலிருந்து புறக்கணிக்கப்பட்டு வந்த நிலை மாற்றமடையும் என நாடாளுமன்ற
உறுப்பினர் சிறிநாத் தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அபிவிருத்தி செய்வதற்காக வேண்டி தீர்க்கமான
திட்டமிடல்களை செய்ய வேண்டிய தேவைப்பாடுகள் இருக்கின்றன. மட்டக்களப்பு
மாவட்டம் மிகவும் வளங்களைக் கொண்டமைந்த மாவட்டமாக காணப்படுகின்றது.

கடந்த காலத்தில் புறக்கணிப்பு

விவசாயம்
சார்ந்த உற்பத்தி, கால்நடைவளர்ப்பு, அடுத்ததாக கடல்வளம் என்பன ஒருங்கே
அமைந்துள்ளன. இவ்வாறு பிரதான தொழில்களாக மட்டக்களப்பு மக்கள் வாழ்வாதாரங்களை
மேற்கொண்டு வருகின்றார்கள்.

ஆனால், அவர்களுக்குரிய வினைத்திறனான உச்சக்கட்ட
விளைவுகளை பெற்றுக் கொள்வதற்குரிய திட்டங்கள் கடந்த காலத்தில் முழுமையாக
இடம்பெறவில்லை.

கித்தூள் குளத்தையும் உறூகம் குளத்தையும் இணைக்கும் திட்டம் இன்னும் முழுமையாக
இடம்பெறவில்லை.

ஸ்திரத்தன்மையான பொருளாதாரம்

அவ்வாறு திட்டம் முழுமை பெறும் பட்சத்தில் மாவட்டத்தில்
வருடாந்தம் எதிர்கொள்ளும் வெள்ளப்பெருக்கை குறைப்பதற்காக அதுவும் பெரும்
செவ்வாக்குச் செலுத்தும்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலை மாற்றமடையும் - சிறிநாத் உறுதி | Srinath Mp On Batticaloa Economy

அதனால், வயல் நிலங்களின் அழிவையும் மக்களின்
அழிவுகளையும் தடுக்க முடியும். இவ்வாறு பாரிய நீர்ப்பாசன திட்டங்களும் இன்னும்
முழுமைபெறாத நிலையிலே காணப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டம் கடந்த
காலத்திலிருந்து புறக்கணிக்கப்பட்டு வந்த நிலைமை மாற்றமடைந்து இவ்வாறு
திட்டங்களை முன்னெடுக்கின்ற பொழுது மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மாத்திரம்
இன்றி நாட்டிலேயே ஒரு ஸ்திரத்தன்மையான பொருளாதார வலுவடைந்து பாரிய பங்களிப்பை
செய்யும்” எனத் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.