ஈபி டி பி யுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பதை
நாங்களும் ஏற்றுக்கொள்ளவில்லை மக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தமிழரசுக் கடசியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்
நேற்று பிற்பகல் (11-06-2025)கிளிநொச்சி முரசு மோட்டை யில் வைத்து
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழரசுக் கட்சியின் உயர்மட்ட குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானம்
இலங்கை தமிழரசுக் கட்சியின் உயர்மட்ட
குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானம் என்பது ஏற்கனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பாக
இருந்த கட்சிகளுடன் பேசி நாங்கள் இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் எடுத்துள்ள
ஆசனங்களின் அடிப்படையில் எந்த கட்சி கூடுதலாக ஆசனங்களை பெற்றுள்ளதோ அந்த
கட்சிகளுக்கு குறைந்த ஆசனங்களை பெற்ற கட்சிகள் ஆதரவு வழங்கி ஆட்சி அமைப்பது
என்ற முடிவுக்கு வந்திருந்தோம்.

ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்
தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி வி கே சிவஞானம் ஈ.பி.டி.பியினுடைய
அலுவலகத்துக்கு சென்று பேசியமை என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்
என்பதையும் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்களினுடைய இனச்
சுத்திகரிப்பு அடக்குமுறைகளுக்கு ஈபிடிபி துணையாக இருந்திருக்கின்றது.

ஆகவே நாங்கள் ஒருபோதும் ஈபி.டிபி யுடன் இணைந்து ஆட்சி அமைப்பதை
ஏற்றுக்கொள்ளவில்லை அதேபோல எங்களுடைய மக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று அவர்
மேலும் தெரிவித்துள்ளார்.
https://www.youtube.com/embed/8At-g-zTVQw

