பிரதீப் ரங்கநாதன்
கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, பின் லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தவர் பிரதீப் ரங்கநாதன். கோமாளி படத்தின் வெற்றி இவருக்கு நல்ல இயக்குநர் என்ற பெயரையும், விருதுகளையும் வாங்கி கொடுத்தது.
சமீபத்தில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் நடித்து Dragon என்ற படம் வெளியானது. இந்த திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. தற்போது, விக்னேஷ் சிவன் நடிப்பில் LIK என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
புதிய கார் வாங்கியுள்ள சீரியல் நடிகை வைஷாலி.. அழகிய வீடியோ இதோ
போட்டியா?
இந்நிலையில், பிரதீப் ரங்கநாதனுக்கு போட்டியாக மற்றொரு இயக்குநர் ஹீரோவாக களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, இந்த இளம் இயக்குநர் வேறு யாருமில்லை, கவின் நடித்த ‘ஸ்டார்’ படத்தை இயக்கிய இயக்குநர் இளன் தான்.
காதல் மற்றும் எமோஷ்னல் கதைக்களத்தை மையமாக வைத்து இவர் எழுதிய கதையில் தான் ஹீரோவாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தையும் AGS நிறுவனமே தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.