முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மட்டக்களப்பு மாவட்டத்தில் மண் அகழ்வினை கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்ட விரோத மண் அகழ்வினை கட்டுப்படுத்தி பௌதீக
வளங்கள் பாதிக்காத வகையில் அவற்றினை சரியான முறைமையின் கீழ் கொண்டுசெல்வதற்கான
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம்
வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

பௌதீக இயற்கை வளங்களை நாட்டிற்காக பயன்படுத்தவேண்டும்.அதற்காக அவற்றினை
அழிக்கமுடியாது எனவும் கூறியுள்ளார்..

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆற்றுமணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்களை
பெற்றுள்ளவர்களுடனான கலந்துரையாடலும் விழிப்புணர்வு கருத்தரங்கும் பழைய
மட்டக்களப்பு மாவட்ட செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

மண் அகழ்வு

சுற்றாடல்,வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையில் இந்த
கருத்தரங்கு நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மண் அகழ்வினை கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டம் | State Minister Sathasivam Viyajendran Speech

இந்த கூட்டத்தில் புவிச்சரிதவியல் திணைக்கள அதிகாரிகள்,சுற்றாடல் திணைக்கள
அதிகாரிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

இதன்போது தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் மண் அகழ்வுகள்
குறித்து கலந்துரையாடப்பட்டது.

இதன்போது சட்ட விரோத மண் அகழ்வுகளை தடுக்கும்
வகையில் புவிச்சரிதவியல் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்களில்
மட்டும் அனுமதிகள் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் அனுமதிகள் மறுக்கப்பட்ட இடங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிகளை
இரத்துச்செய்யவும் தீர்மானிக்கப்பட்டதுடன் எதிர்காலத்தில் திணைக்களத்தின்
அறிவுறுத்தல்களை மீறும் மண் அகழ்வு அனுமதிகளை இரத்துச்செய்யவும் இதன்போது
அதிகாரிகளுக்கு பணிப்புரைகள் விடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.