பொலிவியாவில் (Bolivia) காட்டுத் தீ பரவி வருவதால் அந்நாட்டில் தேசிய அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காட்டுதீயினால் அழிக்கப்பட்ட காடுகளின் அளவு 3 மில்லியன் ஹெக்டேரைத் தாண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயணைப்பு வீரர்கள்
இதனால் தலைநகர் லா பாஸ் உட்பட பல நகரங்களில் காற்றின் தரம் குறைந்துள்ளதாகவும், தற்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு, நாட்டில் தேசிய அவசரகால நிலையை பிரகடனப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தலைநகர் லா பாஸ் நகருக்கு அருகாமையில் காட்டுத் தீ பேரழிவு பதிவாகியுள்ளதுடன், காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் அதிக முயற்சி எடுத்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2010ஆம் ஆண்டுக்குப் பிறகு, பொலிவியாவில் இந்த ஆண்டுதான் அதிக காட்டுத் தீ பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.