ஐக்கிய மக்கள் சக்தியின் துணைத் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்வது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் துணைத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நியமிக்கப்பட உள்ளார் என சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.
இந்த தகவல்கள் குறித்து தயாசிறி ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ளார்.
அழைப்பு
எவ்வாறெனினும், ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொள்ளுமாறு கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தமக்கு அழைப்பு விடுத்திருந்தார் எனவும் அது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை எனவும் தயாசிறி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2024ம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தயாசிறி ஜயசேகர ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டு வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மறுசீரமைப்பு நடவடிக்கைகள்
இதன்போது ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராக இருந்து கொண்டே ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டிருந்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் பல்வேறு மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து பேசப்பட்டு வரும் நிலையில் தயாசிறியின் நியமனம் குறித்து தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.