பார்க்கிங் பட புகழ் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு அடுத்து நடிக்க இருக்கும் படம் STR 49.
இதில் சிம்பு உடன் சந்தானம் காமெடியனாக நடிக்க போகிறார். ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என இருந்த அவர் நீண்ட காலத்திற்கு பிறகு சிம்புவுக்காக காமெடியனாக நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.

கயாடு லோகர்
இந்நிலையில் தற்போது ஹீரோயின் பற்றிய அறிவிப்பு வந்திருக்கிறது. டிராகன் பட நடிகை கயாடு லோகர் தான் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.
சென்சேஷன் நடிகை சிம்புக்கு ஜோடியாக ஒப்பந்தம் ஆகி இருப்பதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


