பிலிப்பைன்ஸ் (Philippines) – மின்டானோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி இன்று (28.06.2025) காலை 7:07 மணிக்கு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரிக்டர் அளவுகோலில் 6.1 அளவாக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
சுனாமி எச்சரிக்கை
டாவோ ஆக்ஸிடென்டல் மாகாணத்திலிருந்து சுமார் 70 கி.மீ தொலைவில், 101 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப்பகுதி இருந்தது.

பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் (PHIVOLCS) இந்த நிலநடுக்கத்தை உறுதிப்படுத்தியதுடன், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பதையும் தெரிவித்துள்ளது.

