எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படத் தயார் என வடக்கின் அரசியல் தலைவர் ஒருவர் தன்னிடம் உறுதிப்படுத்தியதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(anura kumara dissanayake) தெரிவித்தார்.
தலவத்துகொடையில் இன்று (13) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
மகிந்த,கோட்டாபயவிற்கு என்ன நடந்தது
“பலமான அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்கான இடைக்கால கட்டத்தில் நாம் நகர்கிறோம். சில தீர்மானங்களுக்கும் சில நடவடிக்கைகளுக்கும் வலுவான அரசியல் சக்தி தேவை.
2010 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச(mahinda rajapaksa) நாடாளுமன்றத்தில் 2/3 அதிகாரத்தைப் பெற்றார். 5 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர். 2020ல் கோட்டாபய ராஜபக்சவிற்கு(gotabaya rajapaksa) 2/3 அதிகாரம் கிடைத்தது. ஆனால் இரண்டரை ஆண்டுகளில் நாடாளுமன்றத்தின் 2/3 அதிகாரம் பறிபோனது.ஜனாதிபதி வீட்டிற்கு செல்ல வேண்டியிருந்தது.
வடக்கின் முக்கிய அரசியல் தலைவர்
வடக்கின் முக்கிய அரசியல் தலைவர் ஒருவரை சந்தித்தோம். எதிர்வரும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தேசிய மக்கள் படையுடன் இணைந்து செயற்பட தமது குழு விரும்புவதாக தெரிவித்தார்.
மேலும் அவர்கள் எம்முடன் இணைந்து செயற்படாவிட்டால் வடபகுதி மக்கள் எம்முடன் இணைந்து செயற்படத் தயார் எனவும் தெரிவித்துள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.