புதிய அரசாங்கம் வந்த பின்னர் சீனித்தொழிற்சாலை நிறுவனங்கள்
விழும் நிலைக்கு தள்ளப்பட்டு வருவதாக அருணலு மக்கள் முன்னணியின் தலைவர் கே.ஆர் கிசான் தெரிவித்தார்.
ஹட்டனில் நடைபெற்ற ஊடகத்திற்கு
கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர், “செவனகல சீனித்தொழிற்சாலையினை
அடியொட்டி சுமார் 25இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றனர்.
குறித்த
தொழிற்சாலையில் 1500 மேற்பட்டவர்கள் வேலை செய்கின்றனர் இந் நிலையில் கடந்த சில
மாதங்களாக கரும்பு உற்பத்தியாளர்களுக்கு 3000 கோடிக்கு மேல் பணம் செலுத்த
வேண்டியுள்ளது. முகாமைத்துவம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. புதிய
அரசாங்கதிற்கு மூன்றிலிரண்டு பெருபான்மையுள்ளது ஜனாதிபதியும் உள்ளார்.
சீனித்தொழிற்சாலைகள்..
உரிய
தீர்வு பெற்றுக்கொடுக்காததனால் இந்நிலை உருவாகியுள்ளது.
உற்பத்தி செய்த சீனி உள்ளது கரும்பு தொழிலாளர்களுக்கு பணம்
கொடுக்கவில்லை.

ஊழியர்களுக்கு சம்பளம் பெற்றுக்கொடுக்கவில்லை இந்நிலையில்
அரசாங்கம் மௌனம்சாதித்து வருகிறது ஏன் மௌனம் சாதிக்கிறது என்ற கேள்வி இந்த
இடத்தில் எழும்புகிறது.
களவெடுத்தவர்களை கைது செய்கிறார்கள் ஆனால் இதற்கு தீர்
பெற்றுக்கொடுக்க முடியாதா?
ஒரு தனி நபருக்காக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்கிறார்கள் இது
அரசாங்கத்தின் டீலா அல்லது கமிசன் கிடைகிறாதா அல்லது அமைச்சர்களுக்கு வேறு
ஏதும் இருக்கின்றதா என்று எனக்கு தெரியாது இன்று அரசியை ஒரு தனி நபர் தான்
இறக்குமதி செய்கிறார்கள்
இந் நிலையில் அரசாங்கத்தினால் நடத்தப்படும் நிறுவனம்
மூடுப்படும் நிலைமைக்கு வந்துள்ளது ஆகவே உடனடியாக ஜனாதிபதி தலையிட்டு இதனை
தீர்க்க வேண்டும் இல்லையென்றால் மக்கள் கொந்தளிப்பு ஏற்படுவது தவிர்க்க
முடியாத ஒன்றாகிவிடும்” என மேலும் தெரிவித்தார்.

