வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச போட்டியிடுவார் என்பதை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ
சேனசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.
ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க, சஜித்
பிரேமதாசவுக்குத் தனது முழுமையான ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தார்.
பின்னடைவு
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் இதற்கு முன்னர் இரண்டு தேர்தல்களுக்கு மட்டுமே எனது ஆதரவை வழங்குவதாக
உறுதியளித்திருந்தேன்.

ஆனால், கடந்த இரண்டு தேர்தல்களில் சஜித் பிரேமதாச சில பின்னடைவுகளை
எதிர்கொண்டார்.
எனவே, நீதியான முறையிலும் தற்போதைய எதிர்க்கட்சிக் களத்தை கருத்தில் கொண்டும்,
அவர் போட்டியிடுவதற்கு தகுதியானவர் என அங்கீகரிக்கப்பட்டுள்ளார் என்றார்.

