இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதால் ஏற்படும் சாதக – பாதகங்கள் தொடர்பில் அனைத்தையும் ஆராய்ந்து ஒரு சரியான முடிவை எடுப்போம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (Sumanthiran) தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் தமிழரசுக் கட்சியினுடைய மத்திய குழுவில் கூடித் தீர்மானம் எடுப்போம். நாளை (23.04.2024) செவ்வாய்க்கிழமை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூடவுள்ளது.
ஜனாதிபதியின் பொருளாதாரக் கொள்கையினால் ஏற்பட்டுள்ள சாதக நிலை : அரச ஊழியர்களுக்கும் நன்மை
மே தினக் கூட்டம்
அதன்போது, பொது வேட்பாளர் தொடர்பில் ஆரம்பகட்ட பேச்சு நடைபெறும். பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதால் ஏற்படும் சாதக – பாதகங்கள் தொடர்பில் அனைத்தையும் ஆராய்ந்து ஒரு சரியான முடிவை எடுப்போம்.
தமிழரசுக் கட்சியின் மே தினக் கூட்டம் தொடர்பிலும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிப்போம்” என்றார்.
ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டோரிடம் அறவிடப்படும் பணம்: வெளியான அதிர்ச்சி தகவல்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரியை நன்கு அறிந்த நபர்கள் : அம்பலமான தகவல்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |