முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜேவிபியில் ரில்வின் சில்வா போன்று தமிழரசில் சுமந்திரன் : கட்சியைக் கட்டுப்படுத்தும் தலைமைகள்

தமிழ் அரசியலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) பதில் பொதுச் செயலாளர் பதவிக்கு சுமந்திரனை (M. A. Sumanthiran) நியமித்தமை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் பல கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

மக்கள் விடுதலை முன்னணியின்  (JVP) ரில்வின் சில்வா (Tilvin Silva) எப்படி கட்சியைக் கட்டுப்படுத்துகின்றாரே அவ்வாறு தமிழரசுக்கட்சியில் சுமந்திரன் கட்சியைக் கட்டுப்படுத்துகின்றார் என தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் தேசிய அரசியலுக்குள் சம்பந்தனால் (R. Sampanthan) 2010 ஆம் ஆண்டு அழைத்து வரப்பட்ட சுமந்திரன் சட்டவாளராக தமிழினத்திற்கு அவசியமானவராகவும் அரசியல்வாதியாக தமிழினத்திற்கு தேவையா என்ற கேள்வி பலரிடமும் இருக்கின்றது.

கடந்த வருடம் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவின் போதும் தலைவராக தெரிவு செய்யப்படுவேன் என சுமந்திரன் நம்பியிருந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக தோல்வியுற்றார்.

இந்த நிலையில் சுமந்திரன் சிறீதரனுக்கு (S.Shritharan) மறைமுகமாக மிரட்டல் விடுக்கும் வகையில் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். இதன்பின்னரே கட்சிக்கு எதிரான வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

பதில் பொதுச் செயலாளராக இருந்த ப.சத்தியலிங்கம் (P. Sathiyalingam) பதவி விலகியதை அடுத்து சுமந்திரனிடம் இருந்த ஏற்பாடு செயலாளராக வருவது தான். இந்த நிலையில் சுமந்திரன் அந்த பதவிக்கு தெரிவு செய்யப்பட்டார்.

தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவில் தோல்வி, நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி ஏற்பட்ட நிலையில் தமிழரசுக் கட்சியில் முன்னுரிமை இழந்துபோகும் நிலையில் தான் கட்சியின் கட்டுப்பாட்டை தன்வசப்படுத்துவதற்காக பதில் பொதுச் செயலாளர் பதவிக்கு வந்தார்.

சுமந்திரன் இருக்கின்ற இடத்தில் தான் அதிகாரங்கள் குவிக்கப்பட வேண்டும். அவர் இல்லாத இடத்தில் அதிகாரங்கள் இல்லை என்பது தான் கட்சியின் இன்றைய போக்கு.

மக்கள் விடுதலை முன்னணியின் ரில்வின் சில்வா போன்று தமிழரசுக்கட்சியில் சுமந்திரன் இருக்கின்றார். சட்டத்தையும் யாப்பையும் காட்டி எல்லோரையும் மிரட்டி தான் நினைத்தாற் போல் தமிழரசுக் கட்சியைக் கொண்டு செல்வதற்கு சுமந்திரன் முயற்சிக்கின்றார்.

தமிழ் மக்களுக்கு சுமந்திரன் தேவையில்லை என்றாலும் தென்னிலங்கையினுடைய சில முக்கிய விடயங்களை கையாள்வதற்கு சுமந்திரன் தேவையாக இருக்கின்றார்.

இது தொடர்பான மேலும் பல விடயங்களைப் பற்றி பேசுகின்றது ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால்…..

https://www.youtube.com/embed/-FGu2aYW-M8

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.