தேசிய மக்கள் சக்திக்கு தமிழ் மக்களின் வாக்குகள் செல்வதற்கான தகுந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்தவர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்தான் (MA Sumanthran) என கனடாவின் அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தேர்தல் முடிந்தால் ஒரு அரசியல் ஆய்வு நடத்தப்பட வேண்டும், அதிலிருந்து பலதரப்பட்ட விடயங்கள் கணிக்கப்பட வேண்டும்.
ஆனால், அவ்வாறான ஒரு பொறிமுறையை அரசியல் கட்சிகள் கையில் எடுக்கவில்லை, இதற்கு முதன்மை காரணியாக எம்.ஏ.சுமந்திரன்தான் காணப்படுகின்றார்.
தவறான செய்திகளை படித்தவர் சொல்கின்றார் என அனைவரும் சரி என ஒத்துகொள்கின்றனர்.” என அவர் சுட்டிக்காட்டிள்ளார்.
மேலும், தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம், தமிழ் கட்சிகளின் அடுத்த கட்டம், உள்ளுராட்சி தேர்தலில் தமிழ் கட்சிகளின் வகிபங்கு மற்றும் அவர் பலதரப்பட்ட அரசியல் கருத்துகளுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,
https://www.youtube.com/embed/plyaw9_4kIA?start=1013