உள்ளூராட்சித் தேர்தலில் அநுர (Anura Kumara Dissanayake) அலை வீசாது என தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் (
M. A. Sumanthiran) திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சின் யாழ்ப்பாண (Jaffna) தொகுதிக் கிளையின் கூட்டம் நேற்று (11)
பிற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமைச் செயலகத்தில்இடம்பெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கொழும்பில் (Colombo) தமிழரசுக் கட்சி போட்டியிடவில்லை என எடுக்கப்பட்ட தீர்மமானத்திற்கும் அநுர அலையிற்கும் எந்தவொரு சம்பந்தமும் கிடையாது.
எதற்காக அதை இரண்டையும் இணைத்து அனைவரும் கேள்வி கேட்கின்றீர்கள் என்பது எனக்கு தெரியவில்லை, மக்களுக்கு நாங்கள் நினைவூட்டுகின்றோம், இது ஊர் தேர்தல்.
ஊர் தொடர்பில் கவனிக்கப்பட வேண்டிய விடயம், நாடு தொடர்பில் மக்கள் ஒரு தீர்மானத்தை எடுத்து இருக்கலாம், ஆனால் இது ஊர் குறித்த விடயம் என்பதால் இதனை மக்களுக்கு நாங்கள் நினைவூட்டுகின்றோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
https://www.youtube.com/embed/fn1nXGOGoJc