சுமோ
மிர்ச்சி சிவா நடிப்பில் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில் உருவாகி சென்ற வாரம் வெளிவந்த திரைப்படம் சுமோ. இப்படத்தை இயக்குநர் எஸ்.பி. ஹோசிமின் இயக்கியிருந்தார்.
ஜப்பான் நாட்டை சேர்ந்த சுமோ வீரர் Yoshinori Tashiro இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மேலும் பிரியா ஆனந்த், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மோசமான விமர்சனங்களை சந்தித்தது.
வசூல் விவரம்
ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ள சுமோ திரைப்படம் மூன்று நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் மூன்று நாட்களில் உலகளவில் ரூ. 1.9 கோடி வசூல் செய்துள்ளது.