டிவி சேனல்கள் அனைத்தும் போட்டிபோட்டுக்கொண்டு தற்போது புதுப்புது சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.
அந்த வரிசையில் சன் டிவியில் பூங்கொடி என்ற புது சீரியல் தொடங்க இருக்கிறது. வரும் திங்கள் முதல் காலை 11.30க்கு இந்த சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது.
கதை
ஹீரோ மீது அம்மா போல அதிகம் பாசத்தை காட்டும் வளர்ப்பு தாய். ஆனால் உண்மையில் அவர் பொய்யாக தான் பாசத்தை காட்டுகிறார்.
அவரது முகத்திரையை கிழிக்க ஹீரோயின் வரப்போகிறார் என்பது போல ப்ரோமோவில் காட்டப்பட்டு இருக்கிறது.
இந்த கதை பாக்யராஜ் – ராதா ஆகியோர் நடித்த “எங்க சின்ன ராசா” படத்தின் கதையை காப்பி அடித்தது போலவே இருக்கிறது என விமர்சனமும் எழுந்து இருக்கிறது.