சிங்கப்பெண்ணே
சன் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக சிங்கப்பெண்ணே தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
கதையில் இப்போது ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் கதைக்களம் தான் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனந்தி, மித்ராவை தாண்டி இந்த உண்மை யாருக்கும் இதுவரை தெரியவில்லை, அதோடு அவரின் கர்பத்திற்கு யார் காரணம் என்றும் இதுவரை தெரியவில்லை.
இந்த உண்மை வெளிவரும் முன்பே ஆனந்தி மன உறுதி இழந்து காணப்படுகிறார்.
புரொமோ
தற்போது இந்த வாரத்திற்கான புரொமோ வெளியாகியுள்ளது. அதில் ஆனந்தி தனது குடும்பத்தினர், அன்புவுடன் கடைசியாக பேசிவிட்டு அவர்கள் கண் முன்பே தற்கொலை செய்துகொள்ள பீச்சில் இறங்குகிறார்.
அவரை குடும்பத்தினர் காப்பாற்றுவார்களா, உண்மை தெரியவருமா, அவரின் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பதையெல்லாம் வரும் எபிசோடுகளில் காணலாம்.