சிங்கப்பெண்ணே
சன் தொலைக்காட்சியில் பெண்களை மையப்படுத்தி ஏகப்பட்ட தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் ஒன்று தான் சிங்கப்பெண்ணே, திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
கடந்த சில வாரங்களாக இந்த தொடரில் ஒரு பரபரப்பான விஷயம் தான் கதைக்களமாக உள்ளது.
வேறு என்ன ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் தான், தற்போது இந்த விஷயம் அவரது தோழிகளுக்கு தெரியவர அவர்கள் எப்படி ஆனது என கண்டுபிடிக்க தொடங்கினர்.
முதலில் அவர்கள் அன்புவை சந்தேகப்பட ஆனந்தி அவர் தூய்மை ஆனவர் என்பதை நிரூபித்துவிட்டார்.
புரொமோ
அன்பு காரணம் கிடையாது அப்போது யாரால் இப்படி நடந்தது, ஏமாற்றியது யார் என்பதை யோசிக்கிறார்கள். அப்போது ஆனந்தி, வெள்ளி விழா நடந்தது அல்லவா அங்கு தான் ஏதோ நடந்துள்ளது என்று தோழிகளிடம் கூறினார்.
தற்போது அங்கு என்ன நடந்தது, திட்டம் போட்டு யாராவது செய்துள்ளார்களா என்பதை 3 பேரும் ஆதாரத்தை தேடி அலைகிறார்கள்.