மலையக மக்களை கம்பனிகள் கைவிட்டாலும், கடந்த அரசாங்கங்கள் கைவிட்டாலும் அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஒருபோதும் கைவிடாது என பெருந்தோட்ட அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் உறுதியளித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டுக்கான லரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளுக்கு தற்போது பேசுவதற்கு எதுவித தலைப்பும் இல்லை என்பதால் விமர்சனங்களை முன்வைத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சம்பள அதிகரிப்பு
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் இவ்வாறு செய்வதற்கு அவர்களுக்கு வெட்கம் இல்லையா எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

எவ்வாறாயினும், அமைச்சரின் உரைக்கு அர்ச்சுனா எம்.பி சபையில் தனது மறுப்பை தெரிவித்திருந்தார்.
இவ்வாறான பின்னணியில், அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள 200 ரூபாய் வருகை கொடுப்பனவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பது தொடர்பாக தோட்டத் தொழிலாளர்கள் கவலை வௌியிட்டுள்ளனர்.
பல நாட்களாக தாங்கள் எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்து வந்ததாகவும் எதிர்க்கட்சிகள் தங்களுக்கு துரோகம் இழைத்து விட்டதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மீண்டும் வாக்குகளை கேட்டு மலையக்த்திற்கு தோட்டத் தொழிலாளர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/IrfGrajtscg

