சன் டிவியின் சுந்தரி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து இருப்பவர் ஜிஷ்ணு மேனன். சுந்தரி சீரியலில் வில்லனாக அவர் நடித்து இருந்தார்.
முதல் பாகத்தை தொடர்ந்து சுந்தரி இரண்டாம் பாகத்திலும் அவர் நடித்து இருந்தார். ஜிஷ்ணு மேனன் கடந்த சில வருடங்களாக மேக்அப் ஆர்ட்டிஸ்ட் அபியாத்ரா என்பவரை காதலித்து வந்தார்.

திருமணம்
ஜிஷ்ணு மேனன் மற்றும் அபியாத்ரா ஆகியோர் திருமணம் இன்று நடந்து முடிந்து இருக்கிறது.
கேரள முறைப்படி நடந்த திருமணத்தின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. ஜோடிக்கு நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
திருமண போட்டோக்கள் இதோ பாருங்க.




