சூப்பர் சிங்கர்
சூப்பர் சிங்கர், விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக மக்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் ஒரு ரியாலிட்டி ஷோ.
உங்களுக்கு அருமையாக பாடல் பாடும் திறமை உள்ளதா, அதற்கு இந்த நிகழ்ச்சி பெரிய Platform என்றே கூறலாம்.
தொடர்ந்து பல சீசன்கள் ஒளிபரப்பாக இப்போது சீனியர்களுக்கான 11வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
வித்தியாசமான கான்செப்டுடன் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியின் நடுவர்கள் சீட்டில் புதியதாக இணைந்துள்ளார் மிஷ்கின்.
ஆனந்த கண்ணன்
இந்த வாரத்திற்கான சூப்பர் சிங்கர் சீசன் 11ல் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
அதாவது மறைந்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் நினைவாக ஆப்ரஹாம் நித்ய பாண்டியன் ஒரு சூப்பரான Performance கொடுத்துள்ளார். மறைந்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணனுக்காக இப்படி பாடியதாக அவர் கூற பாடகி NSK ரம்யா நிகழ்ச்சிக்கு வருகிறார்.
ஆனந்த கண்ணனுக்கு நமது கலை மீது மிகவும் ஆசை என கூறி எமோஷ்னல் ஆகிறார்.