சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு தற்போது 73 வயதாகிறது. தற்போதும் அவர் பிசியாக படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்து இருக்கும் வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வருகிறது.
அதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் ரஜினி நடித்து வருகிறார்.
மருத்துவமனையில் அனுமதி
இந்நிலையில் ரஜினிகாந்த் தற்போது சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருப்பதாக தகவல் வந்திருக்கிறது.
அவருக்கு இதயம் தொடர்பான பிரச்சனை இருப்பது தெரியவந்த நிலையில், நாளை அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட இருக்கிறது என மருத்துவமனை தெரிவித்து இருக்கிறது.
அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் கூறி இருக்கின்றனர்.