தமிழ் பொதுவேட்பாளரை ஆதரித்து வாக்களிப்பதென்பது இனவாதத்தை தூண்டும் வகையிலான செயற்பாடு அல்ல என தமிழ் தேசிய மக்கள் கூட்டணியின் உறுப்பினர் அருந்தவபாலன் தெரிவித்துள்ளார்.
யாழ். தென்மராட்சியில் உள்ள அவரது இல்லத்தில் இன்றையதினம் (18.09.2024) நடைபெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, அவர் மேலும் கூறுகையில், “தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதென்பது இனவாதமாக இருக்க முடியாது. கடந்த காலத்தில் சிங்கள அரசுகள் மேற்கொண்ட இனவாத்தினால் தான் தமிழ் மக்கள் இந்நிலைக்கு தள்ளப்பட்டு கொண்டிருக்கின்றார்கள்.
இங்கு, தமிழ்பொதுவேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதென்பது, தென்னிலங்கை அரசியலுக்கோ இலங்கை அரசுக்கோ எதிரானதல்ல. அரசியல் தரகு வேளை செய்பவர்கள் அதனை இனவாதமாக சித்தரிக்க முயலுகின்றார்கள். அது நிஜமல்ல” என வலியுறுத்தியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,