எதிர்வரும் அதிபர் தேர்தலில் அதிபர் ரணில் விக்ரமசிங்க (Mahinda Rajapaksa) தமது கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயாராக இருந்தால் பொதுஜன பெரமுன, அவருக்கு பூரண ஆதரவளிக்கும் என முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் நேற்றையதினம் (17) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், வெற்றிக்கான வேலைத்திட்டத்தை கட்சி ஏற்கனவே தயார் செய்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வேட்பாளர்
அதன்படி, எதிர்காலத்தில் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியே ஆட்சி அமைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், தாங்கள் வேட்பாளரை முன்வைக்கும் போது, அவர் எவ்வளவு சக்தி வாய்ந்தவர் என்பது புரியும் என்றும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.