முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சம்பிக ரணவக்கவின் மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம்!

முன்னாள் அமைச்சர் சம்பிக ரணவக்க முன்வைத்த மனுவொன்றை உச்சநீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.

நல்லாட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த போது சம்பிக ரணவக செலுத்திய வாகனத்தில் மோதுண்டு ராஜகிரிய பிரதேசத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்திருந்தார்.

விபத்து

அதனையடுத்து சம்பிக ரணவகவும், அப்போதைய வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக இருந்த தற்போதைய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சுதத் அஸ்மடலவும் இணைந்து, விபத்து நடந்தபோது சம்பிகவின் சாரதியே வாகனத்தை ஓட்டிச் சென்றதாக பொய்ச்சாட்சியங்களைத் தயார் செய்திருந்தனர்.

சம்பிக ரணவக்கவின் மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம்! | Supreme Court Rejects Sambika Ranavaka S Petition

இது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையின் ​பேரில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சம்பிக ரணவக, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சுதத் அஸ்மடல, சம்பிகவின் சாரதி திலும் துசித குமார ஆகியோருக்கு எதிராக வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள விதம் சட்டவிரோதமானது என்று கூறி மேல் நீதிமன்றத்தில் சம்பிக ரணவக தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.

வழக்கின் விசாரணை

ஆனாலும் அதனை மேல் நீதிமன்றம் நிராகரித்திருந்தது

பின்னர் சம்பிக ரணவக்க தரப்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தனர். அங்கும் அவர்களது மனு நிராகரிக்கப்பட்டது.

சம்பிக ரணவக்கவின் மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம்! | Supreme Court Rejects Sambika Ranavaka S Petition

அதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் சம்பிக ரணவக்கவின் சட்டத்தரணிகள் முன்வைத்த மனு பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ தலைமையிலான நீதியரசர்கள் அமர்வினால் தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் சம்பிக ரணவக்கவுக்கு எதிரான வழக்கின் விசாரணையை முன்னெடுத்துச் செல்லுமாறு மேல் நீதிமன்றத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்