முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வட கிழக்கில் ஆட்சி அமைக்க ஆதரவு – சங்கு கூட்டணியினர் சத்தியம்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழரசுக் கட்சி (ITAK) பெரும்பான்மை பெற்ற இடங்களில் அக் கட்சிகள் ஆட்சி அமைக்க ஆதரவு என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் (Suresh Premachandran) தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் (Vavuniya) ஊடக சந்திப்பில் கலந்து காெண்டு கருத்து தெரிவித்த பாேதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் இடம்பெற்றது. அடுத்த மாதம் நடைபெறவுள்ள சபைகள் தொடர்பாக ஆராய்ந்தோம்.

தமிழ் தேசியப் பரப்பில் இருக்கும் கட்சிகள்

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தமிழ் தேசியப் பரப்பில் இருக்கும் கட்சிகள் ஆட்சியமைக்க வேண்டும் என்று உறுதியான நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது.

வட கிழக்கில் ஆட்சி அமைக்க ஆதரவு - சங்கு கூட்டணியினர் சத்தியம் | Suresh Premachandran Press Meet In Vavuniya

இந்த நேரத்தில் 106 ஆசனங்களை வடக்கு – கிழக்கு பகுதிகளில் பெற்ற ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஏனைய தமிழ் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது எனவும் பல்வேறு சபைகளில் ஏனைய தமிழ் கட்சிகளான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழரசுக் கட்சி பெரும்பான்மை பெற்ற இடங்களில் அக் கட்சிகள் ஆட்சி அமைக்க ஆதரவு வழங்குவதாகவும் தீர்மானித்துள்ளாேம்.

வடக்கு கிழக்கில் அதிக ஆசனங்களைக் காெண்டுள்ள தமிழரசுக் கட்சி ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் என்பன ஆட்சி அமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தீர்மானித்துள்ளாேம்.

கட்சியின் நிலைப்பாடு

இரண்டு முறை தமிரசுக் கட்சியுடன் இது தொடர்பில் பேசியுள்ளாேம். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியுடன் பேசியுள்ளோம்.

வட கிழக்கில் ஆட்சி அமைக்க ஆதரவு - சங்கு கூட்டணியினர் சத்தியம் | Suresh Premachandran Press Meet In Vavuniya

அந்த அடிப்படையை வைத்து தான் பேசினாேம். தமிழ் கட்சிகளுடன் தான் நாம் பேசியுள்ளோம்.

ஏனைய தேசிய கட்சிகளுக்கு ஆதரவு வழங்குவது என தீர்மானம் இல்லை. ஆனால் ஆட்சி அமைக்கும் கட்சிகளுக்கு அவர்கள் ஆதரவு வழங்கினால் அது அந்த கட்சியின் நிலைப்பாடு எனத் தெரிவித்தார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.