ரெட்ரோ
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் ரெட்ரோ. இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து வரவேற்பை பெற்றது.
பிக்பாஸில் இருந்து வெளியேறியுள்ள ராணவ் மற்றும் மஞ்சரி மொத்தமாக வாங்கிய சம்பளம்… இத்தனை லட்சமா?
சூர்யா 45
இப்படத்தை தொடர்ந்து சூர்யா கமிட்டாகி இருக்கும் சூர்யா 45 படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். இப்படத்தில் த்ரிஷா பல ஆண்டுகளுக்கு பின் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் வில்லனாக நடித்து வருபவர் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி தான் வில்லனாக நடித்து வருகிறாராம். சூர்யா இப்படத்தில் வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பதை ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு எதிரிவாக நீதிமன்றத்தில் வாதாடும் வக்கீல் கதாபாத்திரத்தில் தான் ஆர்.ஜே. பாலாஜி நடித்து வருகிறாராம்.
இந்த தகவலை பிரபல நடிகரும், இயக்குனருமான சித்ரா லக்ஷ்மணன் அவர்கள் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.