நடிகர் சூர்யா
ரெட்ரோ பட வெற்றிக்கு பிறகு நடிகர் சூர்யா ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுடன் த்ரிஷா, ஷிவதா, அனகா மாயா ரவி, இந்திரன்ஸ், நட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் தான் இசையமைத்துள்ளார். படத்தின் ஃபஸ்ட் லுக், வீடியோ க்ளிம்ஸ் எல்லாம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


கடையில் ரூ. 3 லட்சம் தொலைந்த விவகாரம், மனோஜிற்கே திரும்பிய பிரச்சனை.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ
சூர்யா 46
இப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா தெலுங்கு பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
நாக வம்சியின் தயாரிப்பு நிறுவனமான சித்ரா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படத்தின் மமிதா பைஜு நாயகியாக நடிக்கிறார்.

தற்போது படத்தின் பிளாஷ்பேக் போஷனில் பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூர் என்ற தகவல் வந்துள்ளது, ஆனால் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.
அதோடு படத்திற்கு விஸ்வநாதன் அன் சன்ஸ் என்ற பெயர் வைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.


