சூர்யா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த கங்குவா படம் எதிர்பார்த்த வரவேற்பு பெறாமல் தோல்வி அடைந்தது.
தற்போது, சூர்யா நடித்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ரெட்ரோ படம் வரும் மே 1 – ம் தேதி வெளியாக உள்ளது. சூர்யாவிற்கு ஜோடியாக இப்படத்தில் பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.
மேலும், ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ், கருணாகரன், நந்திதா தாஸ் என பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் இதுவரை வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
வளைகாப்பு முடிந்தது.. மனைவியுடன் பிக் பாஸ் ஷாரிக் வெளியிட்ட பேபி பம்ப் வீடியோ
எவ்வளவு தெரியுமா?
இந்நிலையில், ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் ப்ரீ புக்கிங் தொடங்கியுள்ளது. அந்த வகையில், சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் ரூ. 15 லட்சம் வசூல் செய்துள்ளது என தகவல் கிடைத்துள்ளது.