சூர்யாவின் ரெட்ரோ
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக கங்குவா படம் வெளிவந்தது. ஆனால், இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.

ஆனால், சூர்யாவிற்கு ரெட்ரோ படம் மாஸ் கம் பேக் ஆக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
வருகிற மே 1ம் தேதி இப்படம் உலகெங்கும் வெளிவரவுள்ளது. இப்படத்திற்கான ப்ரோமோஷனில் முழுமூச்சாக இறங்கியுள்ளார் நடிகர் சூர்யா.

வசூலில் வேட்டையாடி வரும் அஜித்தின் குட் பேட் அக்லி.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
நடிகர் சூர்யா ஸ்பீச்
இந்த நிலையில், ப்ரோமோஷன் விழா ஒன்றில், இப்படத்தில் சிகரெட் பிடித்தது குறித்து பேசியுள்ளார்.
இதில் “இந்த படத்திற்காக தான் சிகரெட் அடித்தேன். தயவுசெய்து உங்கள் வாழ்க்கையில் சிகரெட் அடிக்காதீர்கள். ஆரம்பிச்சா விட முடியாது. ஒன்னு தானே, ஒரு பஃப் தானே நினைப்பீங்க, ஆனால் ஆரம்பிச்சா விடவே முடியாது. நான் அதை எப்போதும் ஆதரிக்க மாட்டேன்” என பேசியுள்ளார்.


