நடிகர் சூர்யா அடுத்து RJ பாலாஜி இயக்கத்தில் தனது 45வது படத்தில் நடித்து வருகிறார். தமிழ்நாட்டின் பல இடங்களில் அந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்தது.
தற்போது சென்னை வண்டலூர் அருகே ஒரு கிராமத்தில் சூர்யா45 பட ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.
நிறுத்தம்
அந்த பகுதியில் ஷூட்டிங் நடத்த சாலையை மறித்து பெரிய கிரேன்கள் பல நிறுத்தப்பட்டு இருக்கின்றன.
அது தங்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறி கிராம மக்கள் படக்குழுவுடன் பிரச்சனை செய்து இருக்கின்றனர்.
அனுமதி இல்லாமல் ஷூட்டிங் நடத்தப்படுவதாக கூறி போலிஸ் அதிகாரிகள் படபிப்டிப்பை நிறுத்தி இருக்கின்றனர். அதனால் தற்போது படப்பிடிப்பு பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.