தமிழ் சினிமாவில் சமீப காலமாக சிறு பட்ஜெட் படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது, அந்த வகையில் கௌதம் கணபதி இயக்கத்தில் பிக்பாஸ் தர்ஷன், லால், மன்சூர் அலிகான், சுஜித் நடிப்பில் வெளிவந்துள்ள சரண்டர் எப்படியுள்ளது பார்ப்போம்.
கதைக்களம்
கூடிய விரைவில் சட்டமன்ற தேர்தல் வருகிற நேரத்தில் சரண்டர் செய்யப்பட ஒரு பிரபலம் சரண்டர் செய்த துப்பாக்கி ஒன்று தொலைந்து போகிறது.
அதே நேரத்தில் தேர்தலுகாக பட்டுவாடா செய்ய சொல்லி சுஜித்திடம் கொடுக்கப்பட்ட ரூ. 10 கோடி பணமும் தொலைகிறது.
இந்நிலையில் துப்பாக்கியை கண்டுப்பிடிக்க தர்ஷன் கிளம்ப, அதே நேரத்தில் பணத்தை கண்டிப்பிடிக்க ஒரு குரூப் கிளம்புகிறது.
இந்த இரண்டு தரப்பும் ஒரு கட்டத்தில் சந்திக்க, துப்பாக்கி கிடைத்ததா? பணம் கிடைத்ததா? என்ற பரபரப்பான களமே இந்த சரண்டர்.
படத்தை பற்றிய அலசல்
தர்ஷன் அட நம் பிக்பாஸில் பார்த்தவரா இவர், என ஆச்சரியப்படுத்துகிறார், மிடுக் ஆன போலிஸ் கெட்டப்பில் துப்பாக்கியை தேடி அவர் அலையும் பயணம் தர்ஷனுக்கு கண்டிப்பாக சினிமா உலகில் ஒரு நல்ல ஆரம்பம் இந்த படம்.
இவரை தாண்டி படத்தில் வரும் சுஜித், முனிஷ்காந்த், ரைட்டராக வருபவர்கள் என அனைவரும் சிறந்த நடிப்பை கொடுத்துள்ளனர்.
என்ன தான் காவல்துறை மக்களுக்கு பயனாற்றுபவர்கள் என்று கூறினாலும் அரசியல்வாதிகள் சொன்னால் அவர்கள் கைப்பாவை ஆக இருப்பது போல் காட்டியுள்ளனர்.
காலில் விழ யோசிக்காத KPY பாலா! என்ன ஆனது?.. பரபரப்பு வீடியோ
இதை பார்க்கும் மக்களுக்கு ஒரு கட்டத்தில் போலிஸ் மீது நம்பிக்கை இல்லாமலேயே போய்விடும் என்பது போல் காட்சிகள் உள்ளது.
மேலும் வில்லனாக வரும் சுஜித் பேச்சு கம்மி என்றாலும், தன் முகபாவனைகளால் மிரட்டுகிறார்.
லால் தன் பங்கிற்கு தன் அனுபவ நடிப்பால் பலம் சேர்கிறார்.
ஒரு நல்ல திரைக்கதை இருந்தால் போதும், அதற்கு எந்த ஒரு பெரிய நடிகர்களும் தேவையில்லை, ஜெயித்து விடலாம் என்று கௌதம் நிரூபித்துள்ளார், அதற்கு உதாரணமாக படத்தில் ஒரு 5 வயது சிறுவன் வருவான், அந்த கதாபாத்திரம் கூட மனதில் நிற்கிறது.
என்ன படத்தில் லாஜிக் மீறல்கள் அங்கங்கே வருகிறது, இத்தனை பேர் கொலை செய்யப்படும் போது கூட, அது பற்றி ஒரு கேள்வி கூட யாரும் கேட்கவில்லையா என்ற கேள்விகள் வருகிறது.
டெக்னிக்கலாக படம் பட்ஜெட்டிற்கு ஏற்ற தரத்தில் சிறப்பாகவே உள்ளது.
க்ளாப்ஸ்
படத்தின் திரைக்கதை.
நடிகர்களின் பங்களிப்பு.
பல்ப்ஸ்
கொஞ்சம் லாஜிக் மீறல்.