முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய அனுமதி: எழுந்துள்ள மூன்றாம் உலகப்போர் அச்சம்

மூன்றாம் உலகப்போர் அச்சம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து, உணவுப்பொருட்கள் மற்றும் தண்ணீரை சேமித்துவைக்குமாறு ஸ்வீடன் (Sweden) நாடு தனது குடிமக்களுக்கு அறிவித்துள்ளமையானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யா (Russia) – உக்ரைன் (Ukraine) போரில், தனது ஏவுகணைகளை ரஷ்யாவுக்குள் பயன்படுத்தலாம் என உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதியளித்துள்ள நிலையில் மூன்றாம் உலகப்போர் அச்சம் உருவாகியுள்ளது.

அமெரிக்கா தனது ஏவுகணைகளை ரஷ்யாவுக்குள் பயன்படுத்தலாம் என உக்ரைனுக்கு அனுமதி வழங்கியுள்ளதைத் தொடர்ந்து, சில நாட்களுக்குள் அவை பயன்படுத்தப்படும் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) எச்சரித்துள்ளார்.

மூன்றாம் உலகப்போர் அச்சம் 

ஏவுகணைகளை பயன்படுத்துவதற்கான அனுமதி தொடர்பில் ஊடகங்களில் பல செய்திகள் வெளியாகிவருகின்றன.

ஆனால், தாக்குதல்கள் வார்த்தைகளால் நடத்தப்படுவதில்லை. அவை அறிவிக்கப்படுவதும் இல்லை.ஏவுகணைகளே தங்களுக்காக பேசும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய அனுமதி: எழுந்துள்ள மூன்றாம் உலகப்போர் அச்சம் | Sweden Warns Citizens Prepare For Nuclear War

எனவே, தனது ஏவுகணைகளை ரஷ்யாவுக்குள் பயன்படுத்தலாம் என அமெரிக்கா உக்ரைனுக்கு அனுமதி வழங்கியுள்ள விடயமும், சில நாட்களுக்குள் ஏவுகணைகள் பயன்படுத்தப்படும் என ஜெலன்ஸ்கி எச்சரித்துள்ள விடயமும், மூன்றாம் உலகப்போர் வெடிக்கக்கூடும் என அக்கம் பக்கத்து நாடுகளுக்கு அச்சத்தை உருவாக்கியுள்ளன.

அமெரிக்க ஏவுகணைகளைப் பயன்படுத்துவது தொடர்பில் உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி காணொளி ஒன்றை வெளியிட்ட சில மணி நேரத்துக்குள், ஸ்வீடன், சுமார் ஐந்து மில்லியன் எச்சரிக்கை துண்டுபிரதிகளை விநியோகித்துள்ளது.

எச்சரிக்கை

அதில், உலகில் நிலவும் பதற்றமான சூழலைத் தொடர்ந்து, அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும், அப்படி அணு ஆயுதம், உயிரியல் ஆயுதம் அல்லது ரசாயன ஆயுதம் மூலம் தாக்குதல் நடத்தப்படும் பட்சத்தில், வான்வழித்தாக்குதல் நடத்தப்படும்போது எப்படி பாதுகாப்பான இடங்களில் பதுங்கிக்கொள்ளவேண்டுமோ அதேபோல செயல்படவேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய அனுமதி: எழுந்துள்ள மூன்றாம் உலகப்போர் அச்சம் | Sweden Warns Citizens Prepare For Nuclear War

அத்துடன், பக்கத்து நாடான பின்லாந்து முதலான சில நாடுகளும், தத்தம் குடிமக்களுக்கு இதேபோல் எச்சரிக்கைகள் விடுத்துள்ள விடயம், உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.