2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சுவிட்சர்லாந்தில் (Switzerland) வீட்டு வாடகைகள் உயர்வடைந்துள்ளதாக தெரிவந்துள்ளது.
Homegate Rent Index என்ற அமைப்பு நடத்திய ஆய்வொன்றின் முடிவில் இந்த தரவு கிடைக்கப்பெற்றுள்ளது.
அதன் படி, சுவிட்சர்லாந்தில் வீட்டு வாடகைகள் முதல் ஆறு மாதங்களில் 2.6 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
குடியிருப்பு தட்டுப்பாடுகள்
இந்த நிலையில், சுவிட்சர்லாந்தின் வீட்டு வாடகைகளில் மாற்றம் ஏற்படப்போவதில்லை என்றும் மாறாக, இன்னமும் வாடகை உயர்வே தொடரும் என்றும் சுவிஸ் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றின் நிர்வாக இயக்குநர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், புதிய கட்டிடங்கள் கட்டுதல் வரும் மாதங்களில் அதிகரிக்கப்போவதில்லை என்பதால் நிலவும் குடியிருப்பு தட்டுப்பாடுகள் மேலும் மோசமடையும் காரணத்தால் இவ்வாறு வீட்டு வாடகை அதிகரிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, வாடகை உயர்வுக்கெதிராக சில பிரேரணைகள் வாக்கெடுப்புக்கு வர உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.