நடிகை டாப்ஸியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. தமிழில் ஆடுகளம், ஆரம்பம், காஞ்சனா 2 போன்ற பல படங்களில் நடித்திருப்பவர் அவர்.
கடந்த ஐந்தாறு வருடங்களாக டாப்ஸி ஹிந்தி சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். அதனால் தமிழ், தெலுங்கு பக்கம் அவர் வருவதில்லை.

வெளிநாட்டில் செட்டில் ஆகிறாரா?
இந்நிலையில் டாப்ஸி பண்ணு இந்தியாவை விட்டுவிட்டு டென்மார்க் நாட்டில் செட்டில் ஆகிவிட்டார் என ஒரு பிரபல சேனலில் செய்தி வெளியாகி இருக்கிறது.
அது வதந்தி என கோபமாக டாப்ஸி தனது இன்ஸ்டா பக்கத்தில் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
பொய் செய்தியை பரப்பாமல் கொஞ்சம் Research பண்ணுங்க என அவர் தாக்கி பதிவிட்டு இருக்கிறார்.


