தமன்னா
இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா. படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என கலக்கிக்கொண்டு இருக்கும் இவர் ஜெயிலர், ஸ்ட்ரீ 2 போன்ற சூப்பர்ஹிட் படங்களின் பாடலுக்கு சிறப்பு நடனமாடி ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பெற்று விட்டார்.


ரஜினியின் கூலி படத்தை பார்த்து மனைவி லதா சொன்ன விஷயம்.. இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்
காரணம் இதுதான்
இந்நிலையில், தற்போது பேட்டி ஒன்றில் நடிகை தமன்னா அவரது அழகின் ரகசியம் என்ன என்பது குறித்து பகிர்ந்துள்ளார்.
அதில், ” நான் ஒரு சரும பராமரிப்பு முறையை பின் பற்றி வருகிறேன். சிறந்த சருமத்திற்கான ரகசியம் அதுதான். இதை தினமும் செய்ய வேண்டும்.
சரும பராமரிப்பு என்பது உடற்பயிற்சி, நல்ல மனநலம், நல்ல உணவு, தூக்கம். இவை அனைத்துமே பிரகாசமான சருமத்தை தரும். அதைத் தவறாமல் செய்தால் மட்டுமே பலனளிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.


