நடிகை தமன்னா பிரபல ஹிந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருவதாக இரண்டு வருடங்களுக்கு முன்பு கிசுகிசு பரவியது. அவர்களும் அதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டனர்.
அதன் பிறகு அவர்கள் ஜோடியாக நிகழ்ச்சிகளுக்கு சென்று வந்தனர். வெளிநாடுகளுக்கும் ஒன்றாக ட்ரிப் சென்றனர்.
ஆனால் அவர்கள் சமீபத்தில் பிரேக்கப் செய்துவிட்டதாக ஒரு செய்தி வெளியாகி இருந்தது. தமன்னா உடனே திருமணம் செய்ய வேண்டும் என கூறியதாகவும், அதற்கு விஜய் வர்மா ஒப்புக்கொள்ளாததால் அவர்கள் சண்டைபோட்டு பிரிந்துவிட்டதாகவும் கூறப்பட்டது.
ஒன்றாக ஹோலி கொண்டாட்டம்
பிரேக்அப் பற்றிய செய்தி பாலிவுட் மீடியாக்களில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது தமன்னா மற்றும் விஜய் வர்மா இருவரும் ஒன்றாக ஹோலி கொண்டாடி இருக்கின்றனர்.
நடிகை ரவீனா டான்டன் வீட்டில் தான் அவர்கள் ஹோலி கொண்டாடி இருக்கின்றனர். அந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி இருக்கிறது.
தமன்னா – விஜய் வர்மா நிஜமாகவே பிரிந்துவிட்டார்களா அல்லது பிரேக்அப் செய்தி வதந்தியா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
View this post on Instagram
View this post on Instagram