நடைபெற இருக்கும் 2024 சிறிலங்கா (Sri Lanka) அதிபர் தேர்தலில் தமிழ்ப்பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி தமிழ் மக்கள் பொதுச்சபை தொடர் கலந்துரையாடல்களையும் மற்றும் கூட்டங்களையும் நடத்தி வருகின்றது.
இதனடிப்படையில், கடந்த வெள்ளிக்கிழமை (14) அன்று மாலை கொடிகாமம் வர்த்தக சங்கத்தினருடனான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதனை தொடர்ந்து, நேற்று (18) காலை சங்காணை கூட்டுறவுச்சங்க பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தமிழ்ப்பொதுவேட்பாளர்
இந்தநிலையில், அதிபர் தேர்தலில் தமிழ்ப்பொதுவேட்பாளரை நிறுத்த வேண்டியதன் அவசியம் பற்றியும் மற்றும் தமிழ் மக்கள் ஒன்றுசேர தவறும்பட்சத்தில் தமிழ்மக்களின் வாக்குகளும் பலமும் சிதறும் ஆபத்துக்கள் பற்றியும் தமிழ் மக்கள் பொதுச்சபையின் சார்பாக கலந்துகொண்டோர் விளக்கமளித்துள்ளனர்.

மேலும், கலந்துகொண்டவர்களோடு கேள்வி பதில் உரையாடல்களும் இடம்பெற்றதுடன் தொடர்ந்து வரும் நாட்களில் தங்களின் பங்களிப்பும் இருக்கும் என மக்கள் அமைப்புகளின் அங்கத்தவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Source: https://ibctamil.com/article/tamil-candidate-support-meetings-sl-election-1718790084

