ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் தமிழ் பொது வேட்பாளரின் “நமக்காக நாம்” தேர்தல் பிரசாரப் பயணம் ஆரம்பமாகியுள்ளது.
இன்று (23) காலை இன்று காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம் (Jaffna)சக்கோட்டை கொடிமுனையில் இருந்து ஆரம்பமானதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தப் பயணத்தின் போது தமிழ் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் (Pakkiyaselvam Ariyanethran) உள்ளிட்ட குழுவினர் பிரசார துண்டுப்பிரசுரங்களை விநியோகம் செய்தனர்.
பிரசாரப் பயணம்
குறித்த பிரசாரப் பயணமானது தொடர்ந்து பொலிகண்டி கிழக்கு, பொலிகண்டி மேற்கு, வல்வெட்டித்துறை, ஆதிகோவிலடி, தொண்டைமானாறு, வளலாய், பலாலி, தையிட்டி, காங்கேசன்துறை ஆகிய இடங்களின் ஊடாக நகரவுள்ளது என திட்டமிடப்பட்டிருக்கிறது.
அத்துடன் தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களுக்கும் இந்த பிரச்சாரப் பயணம் தொடர்ந்து நடைபெற இருக்கின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய பகுதிகளிற்கும் மக்களின் அழைப்பின் பெயரிலான பிரசாரப் பணிகளும் திட்டமிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.